There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
பள்ளி / கல்லூரிகளில் சொல்லி தரப்படாத பைனான்சியல் பிளானிங் ரகசியங்கள்.
Instructor: CA N Raja, B.Com., PGDBA, FCA
Language: தமிழ்
Validity Period: 365 days
நாம எல்லாரும் பல பாடங்கள் படிச்சிருக்கோம். எதுக்காக? சில எக்ஸாம் பாஸ் பண்றதுக்காக. சில டிகிரி அல்லது குவாலிஃபிகேஷன் அடையுறதுக்காக.
நாம எல்லாரும் புது புது ஸ்கில் கத்துக்கறதுக்காக சமயம் செலவிடறோம். இருக்கற ஸ்கில்லை அப்டேட் பண்றதுக்காக சமயம் செலவிடறோம். எதுக்காக இதை எல்லாம் செய்ரோம்?
பணம் சம்பாதிக்க - இல்லையா?
ஆனா ஏன் வெறும் 1% - 5% ஆளுங்க மட்டும் பெரிய பணக்காரங்களாவும் 95% ஆளுங்க கிட்ட திட்ட எப்பவுமே ஒரு வித பைனான்சியல் பிரச்சனைல இருக்காங்க?
எதனால இந்த பாகுபாடு? எப்படி ரிச் சூப்பர் ரிச்சா மாறுறாங்க மத்தவங்க 95% வகையிலே இருக்காங்க? இதை கொஞ்சம் ஆழமா பாத்தோம்னா, நமக்கு ஒரு விஷயம் புரியும்.
அதாவது மக்கள் சம்பாதிக்க தான் செய்றாங்க. அவங்களுடைய வருமானம் உயர்ந்துட்டு தான் இருக்கு, அவங்களுடைய வாழ்க்கை தரம் உயர தான் செய்யுது. ஆனால், ஏதோ ஒரு சமயம் அவங்க பைனான்சியல் மிஸ்டேக்ஸ் குள்ள போய்டுறாங்க.
எதனாலன்னு தெரியுமா? எதனாலென்ன, அவங்களுக்கு எங்கேயுமே பர்சனல் பைனான்சியல் பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட் எப்படி செய்யணும்னு யாருமே சொல்லி தந்தது இல்லை.
ஸ்கூல் / காலேஜ், யாருமே சொல்லி தரவில்லை.
பர்சனல் பைனான்சியல் பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட்னுடைய தேவை எப்போ புரிய வரும்னு தெரியுமா?பைனான்சியல் மிஸ்டேக்ஸ் பண்ணி அதனால ஒரு பெரிய டிசாஸ்டர் நடக்கறப்ப மட்டும் தான். நமக்கோ நம்மள சுத்தி இருக்றவங்களுக்கோ நாம பைனான்சியல் மிஸ்டேக்ஸ் செய்றோம்னு தெரியாது. ஏன்னா, பைனான்சியல் மிஸ்டேக்ஸ் அப்படி என்றால் என்னனே நிறையே பேருக்கு தெரியாது.
நாம பல பாடங்கள் படிக்கர்துல நேரம் செலவிடுவோம். எதுக்காக? பணம் எப்படி சம்பாதிக்கலாம் அப்படின்னு தெரிஞ்சிக்கறதுக்காக .
ஆனா நம்மளுடைய அந்த பணத்தை எப்படி நிர்வாகம் பண்ணனும்? அதுக்காக, கொஞ்சம் கூட நேரம் செலவிட மாட்டோம்.
நிறைய பேர் பைனான்சியல் பிரச்னையில் வீழ காரணமே பைனான்சியல் பிளானிங் பற்றி அறிவு இல்லாததுனாலதான்.
நான் ஒரு ரெசெர்ச் பண்ணி பாத்துள்ள, 10ல 9 பேர் பைனான்சியல் இக்னோரன்ஸ்னால தான் பைனான்சியல் பிரச்சனைகள் போய் மாட்டிக்கிறாங்க. அவங்களுடைய நடவடிக்கைகள் தான் அவங்கள பைனான்சியல் பிரச்னையில்ல போய் சிக்க வைக்குது. ஆனா பாவம் அது அவங்களுக்கே தெரியறது இல்லை.
அவங்களுடைய நடவடிக்கைகள் ரொம்ப சாதாரணமா தான் இருக்கும்,.
உதாரணமா, ஒரு மொபைல் போன் வாங்கறது, கார் வாங்கறது, பைக் வாங்கறது, வீடு கற்றது, இன்சூரன்ஸ் எடுக்கறது, சில இன்வெஸ்ட்மெண்ட்ஸ் செய்யறது. இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். இந்த மாதிரி செய்யறதுனால என்ன பிரச்சனை.
இந்த நடவடிக்கைகள் தப்பு இல்லை.
தப்பு எங்க நடக்கும்னா,
- எப்ப நீங்க வாங்கிறீங்க
- எப்படி வாங்கறீங்க
- எந்த சௌர்ஸ்ல வாங்கிறீங்க.
இந்த 3 விஷயத்துல நிறைய பேர் ஒரே மாதிரியா தப்பு பண்றங்க!
தப்பான தீர்மானங்கள், தப்பான நேரத்துல, தப்பான பணம் உபயோகிச்சு, பலர், பல்லாயிரக்கனுக்குல போய் பைனான்சியல் பிரச்சனைகள் வீழறாங்க.
இதுல என்ன கொடுமை தெரியுமா, அவங்கள சுத்தி இருக்கிற யாருமே, அவங்க தப்பான பாதைல போயிட்டு இருக்காங்கன்னு சொல்ல தெரியாது. அதுக்கு பதிலா, சுத்தி இருக்கறவங்க, அவங்க என்னமோ வளர்ந்துட்டு இருக்கறதா நினைச்சுகிட்டு புகழ்ந்து பாராட்டிக்கிட்டு இருப்பாங்க.
எவ்ளோ பெரிய டேமேஜ் !
இது எல்லாரையும் பாதிக்குது.
டாக்டர்
என்ஜினீயர்
வங்கி ஊழியர்
சார்ட்டரேட் அக்கௌன்டன்ட்
சாப்ட்வேர் என்ஜினீயர்
தொழில் செய்வோர்
அப்படினு எல்லாரையும் பாதிக்குது.
லக்ஷ கணக்குல சம்பாதிக்கறது பெரிய விஷயம் இல்ல. அத கட்டி காக்கறது தான் பெரிய விஷயம்.
என்னுடைய அபிப்ராயத்துல, பணம் சம்பாதிக்க தொடங்கிற ஒவ்வொருத்தரும் பர்சனல் பைனான்சியல் பிளானிங் மற்றும் மேனேஜ்மென்ட் எப்படி பண்ணணும் அப்படின்னு தெரிஞ்சிக்கணும்.
பர்சனல் பைனான்சியல் பிளானிங் அப்படின்றது உங்களுடைய வாழ்க்கையில உங்களுக்கு இருக்க கூடிய பைனான்சியல் இலக்குகளை அடைவதற்கான படி படியான அணுகுமுறை. இத நீங்க தெரிஞ்சி கிட்டீங்கன்னா, உங்களுடைய வருமானம், செலவுகள், கடன்கள், முதலீடுகள், சொத்துக்கள் இத எல்லாமே உங்களால கட்டுப்பாடுல வெச்சிக்க முடியும்.
அதை எல்லாம் சொல்லி தருவதற்காக தான் இந்த ஒன்லைன் கோர்ஸ். இந்த கோர்ஸ் முழுக்க முழுக்க பேச்சு நடையிலே தான் இருக்கும். அதனால தான், இந்த விளக்கமும் பேச்சு நடையிலே இருக்கு.
இந்த ஒன்லைன் பாட திட்டம் சுயமாக பார்த்து கேட்டு படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை எடுப்பதற்கு, கம்ப்யூட்டர் / மொபைல் ஃபோன் மூலம் நல்ல இணைய இணைப்பு தேவை. திறம்பட இந்த பாடத்திட்டத்தை கேட்க, நான் உங்கள் ஹெட்ஃபோனை பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.
குறிப்பு:
இந்த கோர்ஸ் தமிழ்ல சொல்லி தரப்பட்டாலும், நிறைய இடத்துல ஆங்கில வாக்குகள் உபயோகிச்சு இருப்பேன்.